

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா நடிப்பில் உருவாகி வரும் படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. தர்புகா சிவா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சசிகுமார் கலந்துகொண்ட தகவலை கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகுமார், தனுஷ் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள கெளதம் மேனன், இந்தப் புகைப்படத்தில் மூன்று இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.