
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு ஒரு தமிழ்ப் பெண் தகுதி பெறவேண்டும் என்று தமிழ் நடிகைகளான ஜனனியும் ரித்விகாவும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி, ரித்விகா, பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து நடத்திய உரையாடலின் தொகுப்பு:
(ஜனனி, ரித்விகாவிடம்) பொன்னம்பலம்: வந்தவரை வாழவைக்கும் தமிழ்நாடு. யாரும் இங்குப் பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆனால் உன்னால் மும்பைக்குச் சென்று ஜெயிக்கமுடியுமா? உன்னை அவ்வளவு செய்வார்கள் தெரியுமா. உனக்காக நாங்கள் இங்குப் பாடுபடுகிறோம்...
ரித்விகா (இடைமறித்து): நான் ஒன்னு சொல்லட்டா ஜனனி, இறுதிச்சுற்றுக்கு ஒரு தமிழ்ப் பெண் போகணும்.
ஜனனி: தமிழ்ப் பெண் வரவேண்டும் என்றால் அது தமிழ் மக்கள் கையில்தான் உள்ளது.
பொன்னம்பலம்: ஜனனி, நீ இயல்பாக இருந்து பார். கடைசிக்கட்டம் வரவில்லையென்றால் நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்.
ரித்விகா: வீட்டுக்குள் வந்தபோது நான் யோசித்தது இதுதான். இறுதிச்சுற்றில் ஒரு பெண் கட்டாயம் வரவேண்டும். ஏனெனில் கடந்த வருடம் இறுதிச்சுற்றில் இடம்பெற்ற இருவரில் ஒரு பெண் கூட இல்லை. அப்படி ஒரு பெண் இறுதிச்சுற்றில் இடம்பெறும்போது அது ஏன் தமிழ்ப் பெண்ணாக இருக்கக்கூடாது?
ஜனனி: கண்டிப்பா
ரித்விகா: இது நம் ஊரில் நடக்கும் நிகழ்ச்சி. நான் அவர்களைத் தவறாகச் சொல்லவில்லை. அவர்களுக்கும் நிறைய திறமை உள்ளது.
ஜனனி: சினிமாவிலேயே தமிழ்ப்பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு.
ரித்விகா: எனக்கும் உண்டு.
ஜனனி: அந்த ஆதங்கத்தை பிக் பாஸிலாவது முறியடிக்க வேண்டும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.