
அண்மையில் சென்னையின் பல பகுதிகளில் போஸ்டர் ஒன்று பலரின் கவனத்தைக் கவர்ந்து வந்தது. முகமூடி அணிந்தவர்களுடன் பிரபலங்கள் நடுவில் இருக்கும் புகைப்படத்துடன் ‘யார் இவர்கள்’ என்ற அடைமொழியுடனான அந்தப் போஸ்டரை உருவாக்கி, விளம்பரப்படுத்தியவர்கள் யார் என்ற கேள்வியும் புதிராகவே இருந்து வந்தது. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
சாமுராய், காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்தப் புதிரை விடுவித்துள்ளார். சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘யார் இவர்கள்’ என்பது இப்படத்தின் டீஸரின் போஸ்டர்தான். இந்தத் டீஸரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளனர். தங்களது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.
ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு, முக்கியமாக சென்னைக்கு வேலைக்கென தங்கள் சொந்த ஊரிலிருந்து கிளம்பி வரும் வெளி மாநில இளைஞர்களைக் காவல் துறையினர் கையாளும் விதம் எப்படிப்பட்டது என்பதை ஊர் அறியும். இதுவே இப்படத்தின் மையக் கதை.
மாணவர்களின் உலகில் ஏற்படும் பிரச்னைகளையும் காரசாரமாகப் பேசுகிறது இந்த டீஸர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.