லஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய ஹீரோயின் இவர்தான்!
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர், இயக்குநர், நடிகை என பன்முகத்துடன் இயங்கி வருபவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவர் மூன்று திரைப்படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இயக்கிய அம்மணி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தனது நான்காவது படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளார் லஷ்மி ராமகிருஷ்ணன். இந்தப் படத்தில் குணசித்திர நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகரைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்.
லவ்லின் மும்பையில் பாலிவுட் நடிகர் அனுபம் கெரின் நடிப்பு கல்லூரியில் நடிப்பு பயின்றவர். இப்படத்தில் லவ்லினின் கதாபாத்திரத்தின் பெயர் ராதா என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
லஷ்மி ராமகிருஷ்ணனின் முதல் படமான ஆரோகணத்தில் விஜி சந்திரசேகர் நடித்துள்ளார். லஷ்மி ராமகிருஷ்ணனன் படப்பிடிப்பு தளத்தில் எப்படி நடந்து கொள்வார் என்று நன்றாகத் தெரியும், லவ்லினைத் தன்னுடைய மகள் போல பார்த்துக் கொள்வார் என்றும் நம்புவதாக விஜி சந்திரசேகர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.