நடிகர் ஆர்யாவின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!

கோலிவுட்டில் நடிகர் ஆர்யாவுக்கென தனி இடம் எப்போதும் உண்டு. அறிந்தும் அறியாமலும்
நடிகர் ஆர்யாவின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!
Published on
Updated on
1 min read

கோலிவுட்டில் நடிகர் ஆர்யாவுக்கென தனி இடம் எப்போதும் உண்டு. அறிந்தும் அறியாமலும், நான் கடவுள், ராஜா ராணி, அவன் இவன், மதராச பட்டினம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கஜினிகாந்த் எனும் படத்தில் நடித்துவருகிறார்.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் ஆர்வாவுக்குத் திருமணம் உறுதியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அந்நிகழ்ச்சியில் அது நடக்கவில்லை. 

தற்போது ஆர்யாவின் வீட்டில் அவரது தம்பி ஷாகிருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ‘சத்யா’ என்று பெயரில் ஷாகிர், ‘புத்தகம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ‘அமரகாவியம்’ எனும் படத்திலும் நடித்துள்ளார். ‘எட்டுத்திக்கும் மதயானை,’ ‘சந்தன தேவன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

ஷாகிர் என்ற சத்யாவுக்கும், துபையை சேர்ந்த பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி, பெற்றோர் சம்மதத்திற்கு காத்திருந்தனர். ஷாகிர் முஸ்லிம், பாவனா இந்துப் பெண். இந்நிலையில் இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க, ஷாகிருக்கும் பாவனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com