பெண்களை கேவலப்படுத்தும் சஞ்சு படத்தின் வசனத்துக்குத் தடை விதிக்க கோரியது தேசிய மகளிர் ஆணையம்!

ரன்பீர் கபூர், சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் சஞ்சு
பெண்களை கேவலப்படுத்தும் சஞ்சு படத்தின் வசனத்துக்குத் தடை விதிக்க கோரியது தேசிய மகளிர் ஆணையம்!
Published on
Updated on
1 min read

ரன்பீர் கபூர், சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் சஞ்சு திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் ஹிராணி. படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த தேசிய மகளிர் ஆணையம் (The National Commission for Women - NCW) தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் எலக்ட்ரானிக் மீடியா மானிடரிங் சென்டருக்கு (EMMC) புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

வழக்கறிஞர் கெளரவ் குலாதியால் அனுப்பப்பட்ட இந்த புகார் கடிதத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மற்றும் பொதுவாக அனைத்துப் பெண்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக சஞ்சு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில ஆபாச வசனத்தை நீக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லரில் ரன்பீர் கபூரும் அனுஷ்கா ஷர்மாவும் உரையாடும் போது இடம்பெற்றுள்ள வசனங்கள் பெண்களை இழிவு செய்யும் விதமாக உள்ளது என்று அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுஷ்கா சஞ்சுவிடம் இதுவரை எத்தனை பெண்களுடன் உறவு வைத்துள்ளாய் எனக் கேட்க, அதற்கு அவர் 308 இருக்கலாம் என்று கூறுவதுடன் அதில் பாலியல் தொழிலாளர்களும் உள்ளனர் என்று பதில் சொல்வார். இது சஞ்சய் தத் வாழ்க்கையில் அவருடன் உரையாடிய போது அவர் கூறிய உண்மைச் செய்தி என்று இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி ஒரு பேட்டியில் வேறு குறிப்பிட்டுள்ளார்.

பயோபிக் எடுக்கிறோம் என்ற பெயரில் நடிகர் ஒருவரின் இமேஜை உயர்த்த இந்த பாலிவுட் பிரபலங்கள் சமூகத்தில் கடினமான சூழ்நிலையில் வாழ்போரை கிண்டல் செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற காட்சிகளால் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். 

சமூகத்தின் உயர்வுக்காக பெண்கள் பலர் போராடி வரும் நிலையில், பெண்களை உடலாகப் பார்க்கும் போக்கும், பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய வசனங்களும் ட்ரெய்லரைப் பார்க்கும் போது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது தெளிவாகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.  

எனவே சர்ச்சைக்குரிய அத்தகைய வசனங்களையும் காட்சிகளையும் நீக்கிவிட தணிக்கை குழுவினரிடமும் புகார் அளித்துள்ளார் குலாதி.  ரன்பீர், அனுஷ்கா, கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரும் இதைச் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com