'எனக்கு 35 உனக்கு 25’! தன்னை விட பத்து வயது இளையவரை மணக்கவிருக்கிறார் நடிகை ஸ்ரேயா!

ஸ்ரேயா ஆண்ட்ரீ திருமணம் மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் உதய்பூரில் நடைபெறவுள்ளன.
'எனக்கு 35 உனக்கு 25’! தன்னை விட பத்து வயது இளையவரை மணக்கவிருக்கிறார் நடிகை ஸ்ரேயா!
Updated on
1 min read

பிரபல நடிகை ஸ்ரேயா மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக மும்பை ஊடகம் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது. 

2001-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான இஷ்டம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் ஸ்ரேயா சரண். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானார் ஸ்ரேயா. தொடர்ந்து அவர் நடித்த சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. ஸ்ரேயா ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்து வந்தார். அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படம் காயத்ரி. அதன் பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஸ்ரேயா.

அதற்கேற்றபடி ஸ்ரேயாவுக்கு வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவைக் காதலித்து வருகிறார் ஸ்ரேயா. தனது காதலரை மார்ச் மாதம் திருமணம் செய்யவுள்ளார். ஸ்ரேயாவுக்கு தற்போது 35 வயதாகிறது அவர் மணக்கவிருக்கும் ஆண்ட்ரீ கோஸ்சீவ் 25 வயதேயானவர்.

தன்னை விட பத்து வயது குறைந்தவரை மணக்கிறார் ஸ்ரேயா. காதலுக்கு வயதில்லை என்பது இதன்மூலம் அறியப்படுகிறது. இதற்கு முன் பாலிவுட்டில் தன்னை விட வயது குறைந்தவர்களை நடிகைகள் திருமணம் செய்துள்ளனர். இந்தி நடிகை அம்ருதா, நடிகர் சயப் அலி கானைவிட 12 வயது மூத்தவர். பின்னர் இத்தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

ஸ்ரேயா ஆண்ட்ரீ திருமணம் மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் உதய்பூரில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com