ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படங்கள்!

அடுத்தபடியாக டன்கிர்க் திரைப்படம் 8 பிரிவுகளிலும், திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி திரைப்படம் 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டன...
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படங்கள்!
Updated on
1 min read

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் நான்கு விருதுகளை அள்ளியுள்ளது.

கால் மீ பை யுவர் நேம், டார்க்கஸ்ட் ஹவர், டன்கிர்க், கெட் அவுட், லேடி ஃபேர்டு, பாந்தம் திரெட், தி போஸ்ட், தி ஷேப் ஆஃப் வாட்டர், த்ரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றன. இதில் தி ஷேப் ஆஃப் வாட்டர் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை என்பது உள்ளிட்ட 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக டன்கிர்க் திரைப்படம் 8 பிரிவுகளிலும், திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி திரைப்படம் 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டன. டன்கிர்க் திரைப்படத்துக்காக பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்திய நடிகர் அலி ஃபசல் நடித்த 'விக்டோரியா அண்ட் அப்துல்' திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த சிகை அலங்காரம், சிறந்த ஒப்பனை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

அதிக ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்

தி ஷேப் ஆஃப் வாட்டர்: 4
டன்கிர்க்: 3
பிளேட் ரன்னர் 2049: 2
கோகோ: 2
டார்கஸ்ட் ஹவர்: 2
திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி: 2

மிகப்பெரிய விருதுகளை அள்ளியவர்கள்

சிறந்த திரைப்படம்: தி ஷேப் ஆஃப் வாட்டர்
சிறந்த இயக்குநர்: கில்லெர்மோ டெல்டோரோ (தி ஷேப் ஆஃப் வாட்டர்)
சிறந்த நடிகர்: கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹவர்)
சிறந்த நடிகை: பிரான்சிஸ் மெக்டார்மெண்ட் (திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி)
சிறந்த திரைக்கதை: கெட் அவுட் (ஜோர்டன் பீலே) & கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் ஐவரி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com