பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: ரஜினி, கமல் நேரில் வாழ்த்து! (படங்கள்)

பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: ரஜினி, கமல் நேரில் வாழ்த்து! (படங்கள்)

ரஜினி, கமல் ஆகிய இருவரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்...
Published on

2002-ல் மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது.

மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகத் தற்போது பணியாற்றி வரும் கீர்த்தனாவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை அவர் மணந்துள்ளார். அக்‌ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.

கீர்த்தனா - அக்‌ஷய் மணமக்களை ரஜினி, கமல் ஆகிய இருவரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள். மேலும் திரையுலகினர் பலரும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com