தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய போராட்டம்: என்ன விலை வைக்க வேண்டும் என்பது எங்கள் உரிமை!

சினிமா தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை கிடைக்கப் பெறவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமைகளும் இருக்கவேண்டும்...
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய போராட்டம்: என்ன விலை வைக்க வேண்டும் என்பது எங்கள் உரிமை!

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக, கடந்த 1 -ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த மார்ச் 1 -ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  தமிழகத்தில் மார்ச் 16 -ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்துள்ளது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய போராட்டம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

மக்களுக்கான மக்கள் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளையும் எப்படி மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கு என்ன விலை வைக்க வேண்டும், எந்தெந்த விதத்தில் அதை மக்கள் பயன்படுத்துமாறு ஆர்வத்தை, ஈர்ப்பை உண்டாக்க வேண்டும் போன்ற நடைமுறைகளை அப்பொருளின் உற்பத்தியாளரோ, நிறுவனமோதான் நிர்ணயம் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. அதன் முழு உரிமை அந்த உற்பத்தியாளருக்கே உண்டு. 

ஆனால் இந்தத் திரையுலகில் மட்டும் இது ஏன் நடைமுறையில் இல்லை. சினிமா தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை கிடைக்கப் பெறவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமைகளும் இருக்கவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com