உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

விஜய் ரசிகராக நடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்?

நாச்சியார் வெற்றிக்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் தற்போது அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு ஆகிய பல படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்

Published On :30 ஜனவரி 2024, 5:57 pm IST

’நாச்சியார்' வெற்றிக்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் தற்போது அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு உள்ளிட்ட பல படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். இவற்றில் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கும் சர்வம் தாள மயம் என்ற படம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. 

‘சர்வம் தாள மயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் விஜய் ரசிகராக நடிக்கிறார் என்ற தகவல் அண்மையில் வெளிவந்துள்ளது. இசையில் நாட்டமுடைய ஒருவராக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நெடுமுடி வேணு, குமரவேல், ஆதிரா, சாந்தா தனஞ்செயன், சுமேஷ், வினித் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ராஜீவ் மேனனின் 'மைண்ட்ஸ்க்ரீன் சினிமாஸ்' நிறுவனம் சார்பில் லதா மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிவியின் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  படத்தில் இடம்பெறுகிறது. ஒன்பது பாடல்கள் உள்ளிட்டு, முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அனைத்து சீன்களுக்கும் பின்னணி இசைக்கோர்ப்பு பணியையும் ஏ.ஆர்.ரஹ்மான் முடித்து விட்டாராம். இப்படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

பரபரப்பாக ஆரம்பித்த இந்தப் பட வேலைகள் ஏதோ காரணத்தால் தாமதமானது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி படப்பிடிப்பு வேலைகளை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.