கோலி, அனுஷ்கா குடியேறவிருக்கும் புது வீட்டின் மாத வாடகை 15 லட்சம்!

விருஷ்கா  தம்பதியினர் தங்களது புது அபார்ட்மெண்ட்டில் உள் அலங்கார வேலைகள் அனைத்தும் முடியும் வரை தற்காலிகமாக 15 லட்ச ரூபாய் மாத வாடகையில் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புது வீட்டில் வசிப்ப
கோலி, அனுஷ்கா குடியேறவிருக்கும் புது வீட்டின் மாத வாடகை 15 லட்சம்!
Published on
Updated on
1 min read

இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த டிசம்பரில் திருமணமானது. இவர்களது திருமணம் தேவதைக் கதைகளில் வருவதைப் போன்றதொரு கனவுத் திருமணமாக அமைந்தது. அது முதலே அனுஷ்கா, கோலி ஜோடி பற்றி தினமொரு சுவாரஸ்யமான செய்தி ஊடகங்களில் வலம் வந்த வண்ணமிருக்கிறது. அந்த வரிசையில் அவர்களைப் பற்றிய சமீபத்திய பரபரப்புச் செய்தி இது. இருவரும் மும்பை ஓர்லி பகுதியில் தற்காலிகமாகக் குடிபுகுவதற்காக ஒரு அபார்ட்மெண்ட்டை வாடகைக்குத் தேர்வு செய்துள்ளனர். அந்த அபார்ட்மெண்ட் ஃப்ளாட்டின் மாத வாடகையே சுமார் 15 லட்சம் என்கிறார்கள். இதே ஓர்லி பகுதியில் விராட் கோலிக்கு சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட்டும் உண்டு. சுமார் 34 கோடி ரூபாய் விலையில் 2016 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட அந்த அபார்ட்மெண்ட்டிற்கு இடம்பெயர்வதற்கு முன்னால் தற்காலிகமாக சுமார் 24 மாதங்களுக்காக மட்டும் இந்த மாத வாடகை ஃபிளாட்டில் தங்க கோலி தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மும்பையில் கோலிக்குச் சொந்தமான அபார்ட்மெண்ட் 7171 சதுர அடி மனையளவு கொண்டது. தனது ட்விட்டர் கணக்கில் கோலி ஒரு வானுயர்ந்த அபார்ட்மெண்ட் வாசலில் நின்று புகைப்படமெடுத்துக் கொண்டதை பகிர்ந்திருந்தார். அது 1973 ஓம்கார் அபார்ட்மெண்ட், ஓர்லி எனும் முகவரியில் இருக்கும் அவரது சொந்த ஃபிளாட் தான் என ரசிகர்களும், நண்பர்களும் நினைத்து விட்டனர். ஆனால், விருஷ்கா = விராட் + அனுஷ்கா தம்பதியினர் தங்களது புது அபார்ட்மெண்ட்டில் உள் அலங்கார வேலைகள் அனைத்தும் முடியும் வரை தற்காலிகமாக 15 லட்ச ரூபாய் மாத வாடகையில் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புது வீட்டில் வசிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com