பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்? நடிகர் செய்த இந்த விஷயம் கேலிக்குரியது!

அடையாளம் தெரியாத நபர்களால் நான் பயங்கரமாக தாக்கப்பட்டேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்
பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்? நடிகர் செய்த இந்த விஷயம் கேலிக்குரியது!
Published on
Updated on
1 min read

அடையாளம் தெரியாத நபர்களால் நான் பயங்கரமாக தாக்கப்பட்டேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்று கன்னட ஹீரோ விக்ரம் கார்த்திக் அண்மையில் போலீஸில் புகார் அளித்தார். அது பரபரப்பாகி இந்த சம்பவம் ஊடகத்தில் வைரலானது. நாகவல்லி Vs அப்தமித்ரரு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கிறார் விக்ரம் கார்த்திக்.

கடந்த செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஆறு மர்ம நபர்களால் பயங்கரமாக தாக்கப்பட்டேன். என் பர்ஸிலிருந்து 50,000 ரூபாய் பணம், விலை உயர்ந்த செல்போனை அந்த மர்ம நபர்கள் திருடிவிட்டார்கள் என்று அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். போலீஸார் விசாரித்தபோது உண்மை தெரிந்தது. சங்கர மட் ரோடில் நடந்த சம்பவம் முற்றிலும் வேறு.

இரவில் காரில் வேகமாக சென்று கொண்டிருந்த விக்ரம் கார்த்திக், பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதியுள்ளார். கார் ஓனர் இவரை திட்டவே பணம் கொடுத்து சமாளித்து, காரையும் விரைவில் சரி செய்வதாகக் கூறியிருப்பதுதான் உண்மை சம்பவம் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது. புது பட புரொமோஷனுக்காக இப்படியெல்லாம் அவர் போலி திருட்டு கதையை உருவாக்கியிருப்பதாக கன்னட ஊடகங்கள் விமசிரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com