தயானந்தர் ஆசிரமத்தில் சாமியார்களுக்கு உணவு பரிமாறினார் ஆன்மிக பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த்!

சினிமா அரசியல் என பொதுவெளியில் வந்த நாள் முதல் சமீபம் வரை அவரைப் பற்றிய பேச்சுக்களும், விமரிசனங்களும்
தயானந்தர் ஆசிரமத்தில் சாமியார்களுக்கு உணவு பரிமாறினார் ஆன்மிக பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த்!
Published on
Updated on
1 min read

நீண்ட காலமாக சினிமா, வெகு சமீபத்தில் அரசியல் என பொதுவெளியில் வந்த நாள் முதல் அண்மை வரை அவரைப் பற்றிய பேச்சுக்களும், விமரிசனங்களும் பாராட்டுக்களும் கணக்கிலடங்காதவை. புகழை தலைக்குள் ஏற்றிக் கொண்டால் அது யாரையும் சமயம் கிடைக்கும்போது கீழே தள்ளிவிடும். தன்னிலிருந்து வேறொன்றாக அதைப் பார்ப்பதால்தான் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டு தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விழைந்து, இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். இமயமலைப் பயணத்தினூடே வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்ற விடியோக்கள் சில இணையத்தில் வைரலானது.

அண்மையில் இமயமலையில் குருவிடம் ஆசி பெற்றார், திரைப்படங்களில் மட்டும்தான் குதிரை சவாரி செய்ய வேண்டுமா என்ன, நிஜத்திலும் செய்ய முடியும், நான் வலுவாகவே இருக்கிறேன் என்று உணர்த்தும்விதமாக குதிரை சவாரி செய்தார், இருட்டான இந்த (அரசியல்?!) உலகை எதிர்கொள்ள குகை பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர் உத்தரகண்ட மாநிலம் டேராடூனுக்கு சென்றார். டேராடூன் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தாம் ஆன்மிகப் பயணத்தில் இருப்பதால் அரசியல் பேசவில்லை என்றுரைத்தார். தேர்தல் களத்தை எக்கணமும் சந்திக்க தயாராகவே உள்ளார் ரஜினி. தொடர்ந்து இப்பயணம் தான் நினைத்தபடி நடந்து கொண்டிருப்பதால் சந்தோஷமாகக் காணப்பட்டார். அதே மகிழ்ச்சியுடன் ரிஷிகேஷிலுள்ள தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்றார் ரஜினி. மடத்தின் சார்பாக அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பும் பிரசாதமும் கொடுக்கப்பட்டது. சுவாமிஜியின் மடத்தில் சில நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட பின்னர், அங்கிருந்த சாமியார்களுக்கு தன் கைப்பட உணவு பரிமாறினார் ரஜினி. ஆசிரமத்துக்கு நிதியுதவியும் செய்த பின் புறப்பட்டார். இந்த பயணம் அவர் மனத்துக்கு நிறைவளித்ததுக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com