இப்படியா ஆடுவது? ஏக், தோ, தீன் பாடலுக்கு நடனமாடிய ஜாக்குலின் பெர்னாண்டஸை விமரிசிக்கும் ரசிகர்கள்! 

பாலிவுட்டில் ஜாக்குலின் பெர்னாடஸைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தற்போது பாகி-2' (Baaghi 2) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படியா ஆடுவது? ஏக், தோ, தீன் பாடலுக்கு நடனமாடிய ஜாக்குலின் பெர்னாண்டஸை விமரிசிக்கும் ரசிகர்கள்! 

பாலிவுட்டில் ஜாக்குலின் பெர்னாடஸைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தற்போது பாகி-2' (Baaghi 2) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரீமீக்ஸ் செய்யப்பட்டுள்ள 'ஏக்...தோக்...தீன்' பாடலுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸின் நடனம் மிகவும் க்ளாமராக இருப்பதாக விமரிசனம் எழுந்துள்ளது.

1988-ம் ஆண்டு வெளியான  'தேசாப்' என்ற படத்தின் கதாநாயகியான மாதுரி தீக்‌ஷித், அப்படத்தில் இடம்பெற்ற ‘ஏக்...தோக்...தீன்’ என்ற பாடலுக்கு நடனமாடியது இந்தியா முழுவதும் பிரபலமானது. மொழி பாகுபாடின்றி அனைவரும் ரசித்த பாடல் அது. லட்சுமிகாந்த் பியாரேலால் இசையமைப்பில் பிரபல பாடகி அல்கா யாக்னிக் பாடியிருந்தார். காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்றுள்ள சில பாடல்களில் ஏக் தோ தீன் பாடலும் ஒன்று எனச் சொல்லலாம். ரிபீடட் ஆடியன்ஸ் எனச் சொல்லக் கூடிய மீண்டும் மீண்டும் ஒரு படத்தைப் பார்க்க விழையும் ரசிகர்களை வரவழைத்த பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு.

இந்நிலையில் 'ஏக்...தோ..தீன்' பாடல் 'பாகி-2' என்ற படத்துக்காக 'ரீமிக்ஸ்' செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

இப்பாடலுக்கு முன்னதாக நடனம் அமைத்த சரோஜ்கான் மாதுரி அந்தப் பாடலுக்கு மிகவும் நயமாக நடனம் ஆடியிருப்பார். ஆனால் ஜாக்குலின் ஆடியதைப் பார்த்தால் நடனம் போலவே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். தேசாப் படத்தின் இயக்குநர் என்.சந்திரா கூறுகையில் இப்பாடல் எவ்வித ரசனையும் இல்லாமல் உருவாக்கப் பட்டிருக்கிறது என்று வருத்தமாக பதிவு செய்துள்ளார். மேலும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஜாக்குலினை விமரிசித்து வருகிறார்கள். மாதுரி தீட்சித் ஆடிய நடனத்தில் காலில் ஒரு பங்கு கூட ஜாக்குலின் ஆடவில்லை, இதென் பெயர் நடனமா இப்படி ஒரு குத்தாட்டம் இந்தப் பாடலுக்குத் தேவையா என்றெல்லாம் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல தளங்களில் விமரிசனங்களையும் கண்டனங்களையும் அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் இந்த நடனத்தை சிலர் பாராட்டியும் வருகிறார்கள். நடிகர் சல்மான் கான் தனது ஃபேஸ்புக்கில் ஜாக்குலின் பழைய பாடலுக்கு நியாயம் செய்துள்ளார். பிரமாதமாக ஆடியிருக்கிரார் எனப் பாராட்டியுள்ளார். இந்தப் நடனத்தை பற்றி மாதுரி தீட்சித் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com