நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி!
பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...


பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெயந்தி. பெங்களூரில் வசிக்கும் அவருக்கு கடந்த ஞாயிறன்று மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து மோசமான வதந்திகள் பரவியதால் ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
கடந்த 35 வருடங்களாக ஆஸ்துமா பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வருகிறார். சுவாசப் பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை. திடீரென அவருடைய உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்த்தோம். பிறகு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றினோம். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைப்படுமளவுக்கு நிலைமை தற்போது இல்லை. நன்குத் தேறி வருகிறார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...