‘பத்மாவத்’ முதல் நாள் வசூல் சாதனையைத் தகர்த்த புதிய ஹிந்திப் படம்!
சமீபத்தில் வெளியாகி இந்தியாவில் ரூ. 300 கோடி வரை வசூலித்த பத்மாவத் படத்தின் முதல் நாள் வசூலை...


டைகர் ஷெராஃப், திஷா பதானி நடிப்பில் அஹ்மத் கான் இயக்கத்தில் நேற்று வெளியான படம் - பாகி 2. க்ஷணம் என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.
சமீபத்தில் வெளியாகி இந்தியாவில் ரூ. 300 கோடி வரை வசூலித்த பத்மாவத் படத்தின் முதல் நாள் வசூலை பாகி 2 படம் தாண்டியுள்ளது. பாகி 2, முதல் நாளன்று இந்தியாவில் பிரிவியூ காட்சிகள் உள்பட ரூ. 25.10 கோடி வசூலித்துள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பத்மாவத் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 19 கோடி வசூலித்தது. இதன் அடிப்படையில் 2018-ல் இந்தியாவில் அதிக முதல் நாள் வசூல் கண்ட படம் என்கிற பெருமையை அடைந்துள்ளது பாகி 2 படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...