வசூலில் உலக சாதனை நிகழ்த்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்’

உலகளவில் இதுவரை வெளியான படங்களில் குறைந்த நாள்களில் 1 பில்லியன் டாலர் வசூலித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது...
வசூலில் உலக சாதனை நிகழ்த்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்’
Updated on
1 min read

உலகளவில் இதுவரை வெளியான படங்களில் குறைந்த நாள்களில் 1 பில்லியன் டாலர் வசூலித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார். 

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) படம் சமீபத்தில் வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் உலகளவில் 11 நாள்களில் (சனிக்கிழமை வரை) 1.16 பில்லியன் டாலர் ($ 1,16,00,00,000) அதாவது ரூ. 7,785.34 கோடி வசூலித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இதுவரை வேறு எந்தப் படமும் 11 நாள்களில் இந்த வசூலை எட்டியதில்லை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்தப் படம் இன்னமும் சீனாவில் வெளியாகவில்லை. அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில்தான் அதிக வசூல் கிடைக்கும். இந்நிலையில் இங்கு வெளியாகாமலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்.

இதற்கு முன்பு Star Wars: The Force Awakens படம் 12 நாள்களில் 1 பில்லியன் டாலரை வசூலித்தது. அதன் சாதனையை இந்தப் படம் தாண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com