'ஒரே வாரத்தில் நான்கு படங்கள் வெளியாவதால் இரண்டு படங்கள் பாதிக்கப்படும்'

நான்கு முக்கியமான படங்களும் ஒரே நாளில் வெளியாவதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன...
'ஒரே வாரத்தில் நான்கு படங்கள் வெளியாவதால் இரண்டு படங்கள் பாதிக்கப்படும்'
Published on
Updated on
1 min read

அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடிப்பில் அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ள படம் - இரவுக்கு ஆயிரம் கண்கள். இசை - விஷால் சந்திரசேகர்.

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல். இசை - அம்ரிஷ்.

விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இசை - யுவன் சங்கர் ராஜா. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்கிற பெயரிலும் உருவாக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் பத்திரிகையாளராக சமந்தாவும் நடித்துள்ளார்கள். மகாநதி நாளை வெளியாகிறது. நடிகையர் திலகம் இரு நாள்கள் கழித்து வெளியாகிறது. 

இந்த நான்கு படங்களும் மே 11 அன்று வெளியாகவுள்ளன. 

ஆனால் இதுபோன்று நான்கு முக்கியமான படங்களும் ஒரே நாளில் வெளியாவதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் கூறியதாவது: அனைவரும் எதிர்பார்க்கும் நான்கு படங்கள் ஒரே வாரத்தில் வெளியாகின்றன. இது மிக அதிகமாக உள்ளது என்பது என் கருத்து. நான்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் நான்கும் ஒரே வாரத்தில் வெளியாவதால் குறைந்தபட்சம் இரண்டு படங்கள் பாதிக்கப்படும் என்பதே என் கவலை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com