

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல். இசை - அம்ரிஷ். இந்தப் படம் நேற்று வெளியாவதாக இருந்த நிலையில் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சித்திக், ஒரு பேட்டியில் கூறியதாவது:
பாஸ்கர் தி ராஸ்கல் மலையாளத்தில் பெரிய ஹிட் படம். மம்மூட்டி சார் அருமையாக நடித்திருந்தார். அதேபோல தமிழிலும் சிறப்பாக நடிப்பவரே இதன் ரீமேக்கில் நடிக்கவேண்டும் என எண்ணினோம். அப்போதுதான் அரவிந்த் சாமி மீண்டும் நடிக்க வந்தார். இவர் பொருத்தமாக இருப்பார் எனத் தயாரிப்பாளர்களிடம் கூறினேன். அவரும் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் நடித்தது போல தமிழிலும் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்க இருந்தபோது அவர் பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. கதாநாயகனாக முதலில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது.
படத்தயாரிப்பாளர்கள் ரஜினியைச் சந்தித்தபோது என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை. அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். அவர் எதுவும் உறுதியளிக்கவில்லையென்றாலும் படத்தைப் பார்த்தார்; நன்றாக இருப்பதாகப் பாராட்டினார். அதன்பிறகு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவுக்கு நான் திரும்பியபோது, படம் இப்போதைக்கு ஆரம்பமாகப் போவதில்லை என்று மட்டும் தெரிந்தது. இதனால் சரியான நடிகருக்காக நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக அரவிந்த் சாமி கிடைத்தார்.
பாஸ்கர் தி ராஸ்கல் படத்தையும் ஹிந்தியும் ரீமேக் செய்கிறேன். அடுத்ததாக மோகன் லால் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அந்தப் படம் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குநரான சித்திக் - ப்ரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.