
தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரன். காதலிக்க நேரமில்லை படத்தில் முதன் முதலில் நடிக்கத் தொடங்கி, பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அவருக்கு விமலா, ஷீலா என இரு மனைவியர் இருந்தனர். ஷீலா புகழ்ப்பெற்ற மலையாள நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. ரவிச்சந்திரனுக்கு ஹம்சவர்தன், ஜார்ஜ் விஷ்ணு, பாலாஜி ஆகிய மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
2011-ம் ஆண்டு வெளியான ஆடுபுலி என்ற படத்தில் கடைசியாக நடித்தார் ரவி சந்திரன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட அவர், தனது 69-ம் வயதில் காலமானார்.
தற்போது 50 வயதான அவரது இளைய மகன் பாலாஜி சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 13) காலை உயிர் நீத்தார்.
ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரன், பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் போன்ற படங்களில் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பெரியப்பாவின் மரணம், தான்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.