
அண்மையில் வெளிவந்த 'தியா' பட வெற்றிக்குப் பிறகு சாய் பல்லவியின் நடிப்பில் வெளிவாகவிருக்கும் படம் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். கடந்த வாரம் படப்பிடிப்பு தளத்தில் சாய் பல்லவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.
கோலிவுட்டில் கிடைத்த ஒரு தகவலின்படி சாய் பல்லவி மாரி 2 -வில் ஆட்டோ ட்ரைவராக நடிக்கிறாராம். இதற்காக ஆட்டோ ஓட்டவும் கற்றுக் கொண்டாராம். இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவராத போதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். மாரி 2 படத்தில் தனுஷ் ஆட்டோ ஓட்டுயதும் ரசிகர்களுக்கு நினைவிருக்கும். அதன் தொடர்ச்சியாக மாரி 2-விலும் ஆட்டோ காட்சிகள் இடம்பெறுகின்றனவாம். சுவாரஸ்யமான கதை சொல்லலுடன் மாரி 2-வில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர் படக்குழுவினர்.
கோலிவுட் ஸ்ட்ரைக் காரணமாக இடையில் தடைப்பட்ட மாரி 2 ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கிவிட்டது. 45 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவிருப்பதாக தெரிவித்தனர் படக்குழுவினர்.
2014-ம் ஆண்டு வெளிவந்த மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் அதன் இரண்டாம் பாகமாக மாரி 2 எடுத்துவருகிறார். இதிலும் தனுஷ் தாதாவாக நடிக்கிறார். தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், க்ருஷ்ணா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்த வருட இறுதிக்குள் மாரி 2 திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.