நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளார்...
நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
Published on
Updated on
1 min read

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வீடியோ பட சேவையை அனைத்து டிஜிடல் சாதனங்கள் வழியாக வழங்கும் சாதனம் - நெட்ஃபிளிக்ஸ். நம் வீட்டில் உள்ள டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி, பிளேஸ்டேஷன்  என அனைத்திலும் நெட்ஃபிளிக்ஸ் வழியாகப் படம் பார்க்கமுடியும். வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படம் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருவதால் உலகளவில் நெட்ஃபிளிக்ஸ் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது. நெட்ஃபிளிக்ஸுக்கு உலகளவில் 12.50 கோடி சந்தாதாரர்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸுடன் படங்களைத் தயாரிக்கவுள்ளார் ஒபாமா. இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

படங்கள், நெட்ஃபிளிக்ஸ் தொடர்கள் தயாரிக்க ஒபாமாவும் மிஷேல் ஒபாமாவும் நெட்பிளிக்ஸுடன் பலவருட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்கள். தொடர்கள், ஆவணப் படங்கள், ஆவணத் தொடர்கள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகத்துக்குக் கதைகள் சொல்ல ஆர்வப்படும் திறமைகளை ஊக்குவிக்கவுள்ளோம் என்று பராக் ஒபாமாவும், கதைகள் எங்களை ஊக்கப்படுத்துகின்றன. எங்களைச் சுற்றியுள்ள உலகைப் புதுவிதமாக எண்ண வைக்கின்றன. எங்கள் சிந்தனையையும் மனத்தையும் மற்றவர்களிடம் வெளிப்படுத்த உதவுகிறது என்று மிஷேல் ஒபாமாவும் இந்தப் புதிய ஒப்பந்தம் குறித்து கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com