அருவிக்குப் பிறகு வேறு படங்களில் இன்னும் ஏன் நடிக்கவில்லை! அதிதி பாலன் விளக்கம்!

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்ற திரைப்படம் அருவி.
அருவிக்குப் பிறகு வேறு படங்களில் இன்னும் ஏன் நடிக்கவில்லை! அதிதி பாலன் விளக்கம்!
Published on
Updated on
1 min read

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்ற திரைப்படம் அருவி. அருண் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்தார்கள். அளவான நடிப்பும், அழகான இளம் பெண்ணிலிருந்து எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நோயாளியாக மாறி அருவி எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர். முதல் படத்திலேயே இத்தகைய கனமான பாத்திரத்தை ஏற்று நடித்ததுடன் அதற்கு சரியான நியாயத்தையும் செய்தமையால் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலகர்களின் கவனத்தை கவர்ந்துவிட்டார். அத்திரைப்படம் சர்வதேச அரங்குகளில் விருதுகளை அள்ளிக் குவித்ததன் முக்கிய காரணம் அதிதியின் பங்களிப்பு எனலாம்.

பொதுவாக முதல் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு தொடர்ந்து பல புதிய வாய்ப்புக்கள் வந்து குவியும். பிரபல தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டூடியோ தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் அருண் பிரபு. இது பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா அண்மையில் வெளியிட்டுள்ளார்.

போலவே அதிதி பாலனுக்கும் நிறைய வாய்ப்புக்கள் தேடி வந்தது. ஆனால் அவர் இன்னும் எந்தப் படத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. காரணம் அதிதி தனது அடுத்த படமும் கதையம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதால் எண்ணற்ற கதைகளை கேட்டும் அவர் இன்னும் தனக்கான கதையை தேர்ந்தெடுக்கவில்லை. அருவி படத்தில் கிடைத்த நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் அதிதி பாலன். இப்படி தாமதித்துக் கொண்டிருந்தால் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று கோலிவுட் தரப்பினர் சொல்லியும், அதிதி இசையவில்லை. பொறுமையாக தனக்கேற்ற படத்தில் நடிக்கவே விருப்பம் என்று தேடி வந்த வாய்ப்புக்களை நிராகரித்துவிட்டார். நல்ல கதை கிடைக்க சில ஒன்றிரண்டு வருடங்கள் ஆனாலும் கூட காத்திருக்கப் போவதாக தீர்மானமாகச் சொல்லிவிட்டாரம் அதிதி பாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com