சென்னையில் வசூல் சாதனை புரிந்த ரஜினியின் 2.0 படம்!

சென்னையில் வசூல் சாதனை புரிந்த ரஜினியின் 2.0 படம்!

சென்னையில் வேறெந்த படமும் முதல் நாளன்று இந்த வசூலை எட்டவில்லை என்று அறியப்படுகிறது...
Published on

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது.

நேற்று வெளியான 2.0 படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 2.40 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் வேறெந்த படமும் முதல் நாளன்று இந்த வசூலை எட்டவில்லை என்று அறியப்படுகிறது. சர்கார் படம் இதற்கு முன்பு ரூ. 2.37 கோடி வசூலித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டில் இதுபோல ஒரு சாதனை நிகழ்த்தப்படவில்லை. முதல் நாளன்று தமிழகத்தில் 2.0 படம் ரூ. 17 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டு அளவில் சர்கார், மெர்சல், கபாலி படங்களின் முதல் நாள் வசூலை விடவும் இது குறைவு என அறியப்படுகிறது. சமீபத்தில் வெளியான சர்கார் படம் முதல் நாளன்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ரூ. 30 கோடி வசூலித்துள்ளது. மேலும், இந்த வசூல் விவரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழ்த் திரையுலக வணிக வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த வசூல் விவரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஆந்திரா/தெலங்கானாவில் 2.0 படம் முதல் நாளன்று ரூ. 19 கோடி வசூலித்துள்ளது. கேரளாவில் ரூ. 4 கோடி வசூல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த வசூலில் 3டி கண்ணாடிக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை. 3டி கண்ணாடிக்காக மக்கள் வழங்கும் கட்டணம் திரையரங்குகளுக்கு நேரடியாகச் செல்கிறது. இதனால் பட வசூலில் இந்தத் தொகை சேர்க்கப்படுவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com