அர்ஜூன் ரெட்டிக்கு சிகரெட் பிடிக்காது!

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருக்கும் விஜய் தேவர கொண்டா, அத்திரைப்படத்தில் தமக்கேற்பட்ட காதல் தோல்வியின் பின் தொடர்ந்து செயின் ஸ்மோக்கராகவும், மொடாக்குடிகாரராகவும் மாறியவராக நடித்த
அர்ஜூன் ரெட்டிக்கு சிகரெட் பிடிக்காது!

படம் பார்த்து இன்ஃப்ளூயன்ஸ் ஆகும் இளைஞர்கள் கவனத்துக்கு...

விரைவில் வெளிவர உள்ள தமது ‘நோட்டா’ திரைப்பட புரமோஷன் வேலைகளுக்காக சென்னையில் முகாமிட்டுள்ள டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா அதிலொரு பகுதியாக தமிழ் இணைய ஊடகங்களுக்கு சுடச்சுட நேர்காணல்களும் அளித்து வருகிறார். அதோடு நோட்டா திரைப்படத்தை ஒவ்வொரு தமிழர் வீடுகளுக்கும் கொண்டு சேர்க்கும் ஆர்வத்தில் நேற்று முன் தினம் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 கிராண்ட் பினாலே விழா நிகழ்வில் விழாவுக்கு முந்தைய கொண்டாட்டமாக பிக்பாஸ் 2 வெற்றிக் கோப்பையை பிக்பாஸ் வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சுற்று போட்டியாளர்களிடம் காண்பிக்கும் சிறப்புத் தூதுவர் வேலையையும் அவர் பார்த்தார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மேலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்த போதும் அர்ஜுன் ரெட்டி திரைப்படமே அவருக்கு உலகளாவிய அளவில் பெரும் புகழை ஈட்டித் தந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியத் திரைப்பட வரிசையில் பாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக என் ஆர் ஐ இந்தியர்கள் அர்ஜூன் ரெட்டியின் வெற்றியை மிக ஸ்திரமாக உறுதிப் படுத்தினர். அந்த வகையில் தெலுங்கு தவிர பிற மொழி ரசிகர்களுக்கு விஜய் தேவர கொண்டாவை அர்ஜூன் ரெட்டியாகத்தான் பலர் அடையாளம் காண்கிறார்கள் என்றால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருக்கும் விஜய் தேவர கொண்டா, அத்திரைப்படத்தில் தமக்கேற்பட்ட காதல் தோல்வியின் பின் தொடர்ந்து செயின் ஸ்மோக்கராகவும், மொடாக்குடிகாரராகவும் மாறியவராக நடித்திருப்பார். ஆனால் நிஜவாழ்வில் தமக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ கிடையாது ஏன் மது அருந்துவதை ஊக்குவிக்கும் அல்லது சிகரெட் பழக்கம் கொண்ட பெண் தோழிகள் கூட தமக்குக் கிடையாது. சொல்லப்போனால் அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடிக்கையில் தமக்கு மிகுந்த சோர்வையும், பதற்றத்தையும் தந்த விஷயங்கள் இவை இரண்டும் தான்’ - என்று இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது விஜய் தேவர கொண்டா தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் தாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்ய குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களாகவும், பெண் பித்தர்களாகவும், செயின் ஸ்மோக்கர்களாகவும் நடிப்பார்களே தவிர தமது தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கவிதிகளை குறைந்த பட்சம் உடல் ஆரோக்யத்துக்கேனும் கேடு விளைவித்துக் கொள்ளாத அளவுக்கு தெளிவுடனும் தீர்க்கமான கட்டுப்பாடுகளுடனும் தான் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com