
ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள படம் 'காற்றின் மொழி'. நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் 'தும்ஹாரி சுலு' தான் காற்றின் மொழியாக தமிழுக்கு வந்துள்ளது. ‘மொழி’ படத்துக்குப் பிறகு ராதாமோகன் - ஜோதிகா இணை மீண்டும் இப்படத்தில் இணைந்து பணிபுரிந்திருக்கிறது.
படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இம்மாதம் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, மனோபாலா, குமரவேல், உமா பத்மநாபன், மோகன்ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சிம்பு சிறப்புத் தோற்றத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். காற்றின் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கெளம்பிட்டாலே விஜயலட்சுமி என்னும் பாடலின் லிரிக்கெல் விடியோவினை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்! அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தப் பாடல் ஈர்த்துவிட்டது.
மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் நகுல் அபயங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.