ஸ்ரீதேவி அல்ல இது ஸ்ரீரெட்டி லுக்! ரகுல் ப்ரீத் சிங்கை கலாய்க்கும் நெட்டிஸன்கள்!

ரகுல் தனது பாலிவுட் வாய்ப்புகளுக்காக மெயிண்டெயின் செய்து வரும் சைஸ் ஜீரோ லுக்கில் ஸ்ரீதேவியாக நடித்தால் சரி வராது.
ஸ்ரீதேவி அல்ல இது ஸ்ரீரெட்டி லுக்! ரகுல் ப்ரீத் சிங்கை கலாய்க்கும் நெட்டிஸன்கள்!
Published on
Updated on
2 min read

தெலுங்கில் முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகி வருகிறது. இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் உருவாகி வரும் அத்திரைப்படத்தில் என் டி ஆராக அவரது மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா நடிக்கிறார். என் டி ஆரின் சமகால சூப்பர் ஹிரோவான ஏ என் ஆர் அலைஸ் நாகேஸ்வர ராவ் வேடத்தில் அக்கினேனி வாரிசுகளில் ஒருவரான நடிகர் சுமந்த் நடிக்கிறார். இவர்கள் இருவருடனும் ஜோடியாக நடித்துப் பல வெற்றிப்படங்களை அளித்த சூப்பர் ஹிட் ஜோடியான மகாநடிகை சாவித்ரி வேடத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமன்றி என் டி ஆரின் முதல் மனைவி பசவதாரகம் வேடத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவிருப்பதும் அதிகாரப்பூர்வ செய்தியே. அதோடு என் டி ஆரின் அரசியல் வாழ்வில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் பாகுபலி 1& 2 புகழ் நடிகர் ராணா டகுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேற்கண்ட அத்தனை பேரில் ராணா, பாலகிருஷ்ணா, சுமந்த் உள்ளிட்டோரின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்பட்டு என் டி ஆர் ரசிகர்களிடையே பலத்த பாராட்டுகளைப் பெற்றது. ஆனால், என் டி ஆரின் திரைப்படங்களில் 70, 80 களில் இணைந்தவரான இந்திய சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி வேடத்தில் நடிப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் குறித்த தகவல்கள் கடந்த ஒரு வாரமாகவே இனையத்தில் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று அவரது ஃபர்ஸ்ட் லுக் படப்பிடிப்புக் குழுவினரால் இணையத்தில் வெளியிடப்பட்டது. வெளியான நொடி முதல் பலத்த எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளாகி வரும் ஃபர்ஸ்ட் லுக் இவருடையதாகத் தான் இருக்கக் கூடும்.

ஸ்ரீதேவியாக ’அதிலோக சுந்தரி’ திரைப்படத்தில் என் டி ஆருடன் (படத்தில் பாலகிருஷ்ணா) இணைந்து நடனமாடும் ரகுல் ஃப்ரீத் சிங்கின் புகைப்படத்தை நெட்டிஸன்கள் ட்ரால் செய்து... ரகுல் பார்க்க ஸ்ரீதேவி மாதிரியா இருக்கிறார்... நன்றாகப் பாருங்கள் இவர் முகத்தில் ஸ்ரீரெட்டி களை தான் தெரிகிறது. வாழ்க்கைச் சித்திரத்தில் நடிக்க வேண்டுமென்றால் சாவித்ரி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது போல உருவத்தில் கொஞ்சமாவது காம்ப்ரமைஸ் செய்து கொண்டு நடிக்க வேண்டும். ரகுல் தனது பாலிவுட் வாய்ப்புகளுக்காக மெயிண்டெயின் செய்து வரும் சைஸ் ஜீரோ லுக்கில் ஸ்ரீதேவியாக நடித்தால் சரி வராது. இந்த லுக்கில் ஸ்ரீதேவியின் சுட்டித் தனம் மின்னும் கண்களும், பூசின உடல்வாகும் மிஸ்ஸிங். பார்க்க சகிக்கவில்லை. என்று கிண்டலடிக்கிறார்கள். பயோ பிக் என்று சொல்லப்படக் கூடிய வாழ்க்கைச் சித்திரத்தில் நடிக்க முன் வந்த நடிகர் நடிகைகளில் ரகுல் ப்ரீத் சிங் அளவுக்கு மிக மோசமான விமர்சனத்திற்கு உள்ளானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. காரணம் அவர் ஸ்ரீதேவி வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பதால். ஸ்ரீதேவி மறைந்தும் கூட இப்போதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படக் கூடிய கனவு தேவதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com