வடசென்னையில் நடிக்க அமீர் வெற்றிமாறனிடம் விடுத்த கோரிக்கை என்ன? (விடியோ)

சினிமா எக்ஸ்பிரஸ் யூட்யூப் சானல் வழங்கும் ‘ரிலீங் இன்’ எனும் நிகழ்ச்சி பல சினிமா பிரபலங்கள் உரையாடல்களைக் கொண்ட ஒரு தொடராகும்.
வடசென்னையில் நடிக்க அமீர் வெற்றிமாறனிடம் விடுத்த கோரிக்கை என்ன? (விடியோ)
Published on
Updated on
1 min read

சினிமா எக்ஸ்பிரஸ் யூட்யூப் சானல் வழங்கும் ‘ரிலீங் இன்’ எனும் நிகழ்ச்சி பல சினிமா பிரபலங்கள் உரையாடல்களைக் கொண்ட ஒரு தொடராகும். இந்த வார சிறப்பு உரையாடலில், இயக்குனர் / நடிகர் அமீர் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் அருண்குமார் சேகருக்கு அளித்த நேர்காணல் இது. 

படித்து முடித்ததும் வேலை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வேலைகளை எல்லாம் நான் செய்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு வேலையின் போதும் இது இல்லை என் பயணம் என்ற தேடல் தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தது. திருமணம் முடிந்து, குழந்தை பிறந்த பிறகு தான் சென்னை வந்து உதவி இயக்குநர் ஆனேன். அதன் பின் எல்லாமே சினிமாதான். அந்தளவுக்கு சினிமாவை அவ்வளவு நான் நேசிச்சிருக்கேன்.

சினிமா வியாபாரத்தை சரியாக நான் புரிந்து கொள்ளவில்லை. எது மக்களை சென்றடையும், மக்கள் எதனை ரசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். சினிமாவிற்குள் வேலை செய்ய ஒரு இலக்கணம் உள்ளது. அதெல்லாம் எனக்குத் தெரியாது. தேவையில்லை என நினைக்கிறேன்’ என்று கூறியவர் பல விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். குறிப்பாக வட சென்னை படத்த்தைப் பற்றிக் கூறுகையில், வடசென்னையில் நடிப்பதற்கு முன் இரண்டு கோரிக்கைகளை இயக்குநரிம் வைத்தேன் என்றார் அமீர். அவை என்னவென்று தெரிந்து கொள்ள முழு விடியோவையும் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com