
கேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழில் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ள வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் சமீபத்தில் வைக்கம் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இண்டீரியர் டிசைனராக உள்ள அனூப், மிமிக்ரி கலைஞராகவும் உள்ளார். திருமணம், வைக்கம் மஹாதேவ கோயிலில் நடைபெற்றது. பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.