‘யாருடா அப்படி சொன்னது? இது என் தங்கச்சிடா’ என்று கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய் சேதுபதி!

தமிழகத்தின் குக்கிராமல் ஒன்றில் பிறந்து ஒரு திருநங்கையாகத் தன்னை அங்கு சுயமரியாதையுடன் நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் தவித்துப் பின் பிழைப்புத் தேடி சகலமானவர்களையும் போல் சென்னை நோக்கி ஈர்க்கப்பட்டவர
‘யாருடா அப்படி சொன்னது? இது என் தங்கச்சிடா’ என்று கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய் சேதுபதி!
Published on
Updated on
1 min read

தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்கள்!

விருந்தினர்: திருநங்கை ஜீவா சுப்ரமண்யம்
சந்திப்பு: கார்த்திகா வாசுதேவன்

முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது நாம் திருநங்கைகள் குறித்து அதிகம் பேசத்தொடங்கி இருக்கிறோம். அவர்களுக்கான சமூக அங்கீகாரமும், சுயமரியாதையும் எள்ளளவும் குறையக் கூடாது. அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல, நம்மைப்போன்ற சகமனிதர்களே எனும் சகிப்புத் தன்மையும், நியாய உணர்வும் கொண்டவர்களாக இளைய தலைமுறையினர் மாறி வருகின்றனர். அந்த மனநிலையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் நேர்காணலுக்காக இந்த வாரம் நாம் சந்திக்கவிருப்பது திருநங்கை ஜீவா சுப்ரமண்யம் அவர்களை. 

ஓவர் டூ ஜீவா... 

தமிழகத்தின் குக்கிராமல் ஒன்றில் பிறந்து ஒரு திருநங்கையாகத் தன்னை அங்கு சுயமரியாதையுடன் நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் தவித்துப் பின் பிழைப்புத் தேடி சகலமானவர்களையும் போல் சென்னை நோக்கி ஈர்க்கப்பட்டவர். சென்னைக்கு வந்த பின் அவரது வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறி பல தடங்கல்களைக் கடந்து தற்போது ஒரு திறமையான ஒப்பனைக் கலைஞராகவும், நடிகையாகவும் பரிமளித்து வருகிறார் என்பதை தினமணி நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வழியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

திருநங்கை ஜீவாவுடனான சந்திப்பின் முன்னோட்டம் இது... 

முழுமையான நேர்காணலைக் காண நாளை வரை காத்திருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com