ஜீனியஸ், ஜருகண்டி, எடக்கு, கரிமுகன், திருப்பதி சாமி குடும்பம் என ஐந்துப் படங்கள் இன்று வெளியாக இருந்தன. ஆனால் வெளியானதோ இரு படங்கள் மட்டுமே. ஜீனியஸ், ஜருகண்டி.
ரோஷன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் - ஜீனியஸ். யுவன் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி எழுதி இயக்கியுள்ள படம் - ஜருகண்டி. ஜெய், ரெபா மோனிகா, ரோபோ சங்கர், டேனியல், அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஏன் 5 படங்கள் வெளியாகவில்லை? இந்த இரு படங்களைத் தவிர இதர மூன்றும் சிறிய படங்கள். ஏற்கெனவே வட சென்னை, 96, ராட்சசன், செக்கச் சிவந்த வானம் பரியேறும் பெருமாள், சண்டக்கோழி2 போன்ற படங்கள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று வேறு இரு புதிய படங்கள் வெளியாவதால் இதற்கு மேலும் 3 சிறிய படங்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது எனத் திரையரங்குகள் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளன. இதனால் அந்த மூன்று படங்களின் புதிய வெளியீட்டுத் தேதிகள் இனிமேல்தான் தெரியவரும்.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுக்ரன்! பெண் கொடுமைகளுக்கு எதிராக வாதாடும் மாஸ் வழக்கறிஞராக விஜய்!

வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

முதல்வர்களின் படங்களை வைப்பதில் போட்டி! பாதியில் முடிந்த காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம்!

தமிழகத்தை வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்ல அண்ணாமலை வலியுறுத்தல்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



