ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கவிருக்கும் ராணாவின் ஸ்பெஷல் அனுபவங்கள்!

இந்த வாய்ப்பு பிறருக்கு கிடைத்தற்கரியது. ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால் இது தனக்குக் கிட்டிய ஸ்பெஷல் சலுகை எனக் கருதி அதற்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் நட
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கவிருக்கும் ராணாவின் ஸ்பெஷல் அனுபவங்கள்!
Published on
Updated on
2 min read

இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என் டி ஆர் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகி வருவது பழைய செய்தி. இத்திரைப்படத்தில் என் டி ஆராக நடித்துக் கொண்டிருப்பது என் டி ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என் டி ஆரின் மனைவி பசவதாரகமாக நடித்துக் கொண்டிருப்பது நடிகை வித்யாபாலன். இவர்களுடன் என்டிஆரின் அரசியல் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நபரும், தற்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது நடிகர் ராணா டகுபதி என்று கூறப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, என் டி ஆரின் தெலுகு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மட்டுமே செயல்படவில்லை. பின்னாட்களில் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் ஆனவர். என் டி ஆரின் மகள் புவனேஸ்வரியின் கணவராகி என் டி ஆரின் மருமகனாகவும் ஆனார். அவரது வேடத்தில் ராணா டகுபதி நடிக்கவிருப்பதால் என் டி ஆர் வாழ்ந்த வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டு திரைப்படக் காட்சிகள் அவருக்கு விளக்கப்பட்டன. அது மட்டுமல்ல தனது கதாபாத்திரத்தை திரையில் ராணா சித்தரிக்கவிருப்பதால் முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது பிஸியான வேலைப்பளுவின் நடிவில் ராணாவைச் சந்தித்து , தனக்கும் மறைந்த என் டி ஆருக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி விளக்கத் தவறவில்லை. 

தங்களுக்கிடையே நிகழ்ந்த முக்கியமான அரசியல் உரையாடல்களை சந்திர பாபு நாயுடு, ராணாவுக்கு விளக்கியதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இதுவரை யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக என் டி ஆர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று அவரது மேக் அறையில் அமர்ந்து அவருடன் உரையாடுகிறார் போன்ற காட்சிகள் எல்லாம் எடுக்கப் பட்ட போது தனக்கு அவர் வாழ்ந்த காலத்துக்கே மீண்டும் சென்று வந்த உணர்வு கிட்டியதாகக் கூறுகிறார் ராணா.

இந்த வாய்ப்பு பிறருக்கு கிடைத்தற்கரியது. ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால் இது தனக்குக் கிட்டிய ஸ்பெஷல் சலுகை எனக் கருதி அதற்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் நடிகர் ராணா.

முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியலில் காலடி எடுத்து வைத்த ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் ஒல்லியாக நெடு நெடுவென வளர்ந்த தோற்றத்துடனும், தாடியுடனும் காட்சியளிப்பது வழக்கம். தற்போதைய ராணாவின் தோற்றம் அதனுடன் அட்சர சுத்தமாகப் பொருந்துகிறது. இளம் வயது சந்திரபாபு நாயுடுவாக நடிக்கவேண்டியே ராணா உடல் இளைத்திருக்கிறார். பாகுபலி 2 திரைப்படத்தில் வயதான வலிமையான ராஜாவாக நடிப்பதற்காக உடல் எடையை ஏற்றியிருந்த ராணா, உடனடியாக அந்த எடையைக் குறைக்க முற்பட்டதில் அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு வதந்திகள் கிளப்பி விடப்பட்டிருந்தன. நடுவில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் விவகாரம் வேறு ராணா குடும்பத்தாரை ஆட்டிப் படைத்தது. எல்லாம் சேர்ந்து ராணா மிகத்துயரத்தில் இருக்கிறார் என்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றன. ஆனால் உண்மை அதுவல்ல, தான்... அடுத்ததாக சந்திரபாபு நாயுடுவாக நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்ததே உண்மை என நிரூபித்திருக்கிறார் ராணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com