

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. தர்புகா சிவா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள சர்கார் படம் மட்டும் வெளிவருகிற சூழலில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தைத் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள். அஜித் நடித்துவரும் விஸ்வாசம், சூர்யா நடித்துவரும் என்ஜிகே ஆகிய படங்கள் முதலில் தீபாவளிக்குத் திட்டமிடப்பட்டு பிறகு அதன் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது தீபாவளிக் களத்தில் தற்போது இந்தப் படம் குதித்துள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைக் கொண்டாடியதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு புகைப்படத்தில், கேக்கில் ஹாப்பி தீபாவளி 2018 என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் படம் தீபாவளிக்கு வெளிவருவது தற்போது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.