சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கோவை செந்தில் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் முதலில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் கோவை செந்தில். பல படங்களில் குறிப்பிடத்தக்க அளவில் காமெடி வேடங்களிலும் கலக்கியுள்ளார். 'ஏய்' படத்தில் இவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த காமெடி காட்சியானது மிகவும் பிரபலமானது.
இவர் படையப்பா, புதுமை பித்தன், கோவா, இது நம்ம ஆளு, மௌன கீதங்கள் என்று பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இயக்குநர் விக்ரமன் இயக்கிய படங்களில் அதிகளவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஞாயிறன்று காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் சங்கம் மற்றும் பல்வேறு நடிகர்-நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.