பொற்கோவிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாரா விக்னேஷ் ஜோடி! (விடியோ)

நடிகை நயன்தாரா அண்மையில் விக்‌ஷேன் சிவனுடன் அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்கு சென்றார்.
பொற்கோவிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாரா விக்னேஷ் ஜோடி! (விடியோ)
Published on
Updated on
1 min read

நடிகை நயன்தாரா அண்மையில் விக்‌ஷேன் சிவனுடன் அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்கு சென்றார். படப்பிடிப்பு முடித்த பின்னர் விடுமுறையைக் கழிக்க இந்த ஜோடி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளனர்.

இதற்கு முன்னரும் நயன்தாரா பொற்கோயிலுக்கு செல்லும் வழக்கம் உடையவர். நயன்தாராவின் மனதுக்குப் பிடித்த கோவில் இது.

இந்த முறை அமிர்தசரஸ் செல்கையில் தன் காதலர் விக்னேஷ் சிவனை உடன் அழைத்துக் கொண்டு பயணித்தார். இருவரும் வழிபாடுகளை முடித்தபின் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

சமத்துவ நோக்குடன் அனைவருக்கும் ஒரே உணவு ஒரே இடத்தின் பரிமாறப்படும் லங்கார் எனும் பகுதிக்கு சென்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி அங்கு அனைவருடன் அமர்ந்து உணவருத்தினர். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com