பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். இவர், கதக் நடனத்தை முறையே கற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்துள்ளார். அது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வர்மா படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் இயக்குநர் பாலா. இதையடுத்து அடுத்தச் சில மாதங்களில் இந்தப் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

பேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா? ப. சிதம்பரம் கண்டனம்

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்

தடை விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


