
பெரிய படங்களின் டிரெய்லர்கள் சில சமயம் நமக்குப் பிடிக்காமல் போய்விடும். சத்தமில்லாமல் வருகிற சிறிய படங்களின் டிரெய்லர்கள் நம் கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளது ராட்சசன் பட டிரெய்லர்.
விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ராட்சசன். இசை - ஜிப்ரான்.
சமீபத்தில் வெளியான இந்த டிரெய்லருக்கு நடிகர்கள் விஷால், ஆர்யா, பிந்துமாதவி மற்றும் இயக்குநர்கள் சீனு ராமசாமி, திரு உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் படம் அக்டோபர் 5 அன்று வெளிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.