
பாடகி வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி ஜெயராம், ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். கலைவாணி என்கிற இயற்பெயர் கொண்டவர், திருமணத்துக்குப் பிறகு தனது கணவருடைய பெயரையும் சேர்த்து வாணி ஜெயராம் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். 1960களில் திருமணம் ஆனவுடன், மும்பைக்குச் சென்ற வாணி ஜெயராம், திரையுலகில் பாடகியானபிறகு தமிழகத்தில் குடியேறினார். வங்கிப் பணியில் இருந்த வாணி ஜெயராம், மும்பையில் ஹிந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொண்டு பிறகு திரையுலகில் பாடகியாக பிரபலம் ஆனதற்கு அவருடைய கணவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
சமீபமாக உடல்நலக்குறைவுடன் இருந்த வாணி ஜெயராமின் கணவர் இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.