சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழில் பேசி பட விளம்பரம் செய்துள்ள அமீர் கான் - அமிதாப்!

அமீர் கானும் அமிதாப்பும் தமிழில் பேசி பட விளம்பரம் செய்துள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது...

News image
Updated On :26 செப்டம்பர் 2018, 12:26 pm

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கிறார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்துள்ளார்கள்.

விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ளது.

ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து அமீர் கானும் அமிதாப் பச்சனும் தமிழில் பேசி விளம்பரம் செய்துள்ளார்கள். இந்திய அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்களில் இந்தப் படம் வெளிவரவுள்ளதாக யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. செப்டம்பர் 27 அன்று டிரெய்லர் வெளிவரவுள்ளது. 

அமீர் கானும் அமிதாப்பும் தமிழில் பேசி பட விளம்பரம் செய்துள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இருவருக்கும் பாராட்டு தெரிவித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.