
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
இன்று வெளியாகியுள்ள இப்படத்துக்கு அற்புதமான விமரிசனங்கள் கிடைத்து வருகின்றன. பெரும்பாலான விமரிசனங்கள் படத்தைக் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளன.
இயக்குநர் கெளதம் மேனன், இந்தப் படத்தின் 5 மணி காலைக் காட்சியைப் பார்த்துவிட்டு, படத்தைப் புகழ்ந்து ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
மணி ரத்னத்தின் புத்திசாலித்தனமான நடிகர் பட்டாளம், திரையை ஜொலிக்கவைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓர் அற்புதமான கலைஞனின் பணி இது. கடினமான உள்ளடக்கத்தைப் படமாக்குவதில் அவரிடம் குதூகலம் தென்படுகிறது. விதிமுறைகளைத் தகர்த்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.