முடிவுக்கு வந்த 'தெய்வமகள்’ சீரியல்! கடைசி நாள் படப்பிடிப்பில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகர்கள்! (படங்கள்)

முடிவுக்கு வந்த 'தெய்வமகள்’ சீரியல்! கடைசி நாள் படப்பிடிப்பில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகர்கள்! (படங்கள்)

பல வீடுகளில் இரவு உணவு சீரியல் பார்த்துக் கொண்டே தான் நடக்கும். அல்லது பலருக்கு சீரியல் பார்த்த பிறகு தான் சாப்பாடே இறங்கும்.
Published on

பல வீடுகளில் இரவு உணவு சீரியல் பார்த்துக் கொண்டே தான் நடக்கும். அல்லது பலருக்கு சீரியல் பார்த்த பிறகு தான் சாப்பாடே இறங்கும். இப்படி பல வருடங்களாக சின்னத்திரையை சீரியல்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுதான். 

இந்த மெகா சீரியல்கள்  பல வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகின்றன.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தெய்வமகள் சீரியல் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்ற ஒன்று.

இந்த சீரியல் விரைவில் முடிந்துவிடும் என்ற தகவல் சானல் தரப்பிலிருந்து வெளிவந்துள்ளது.

இந்த மெகா தொடரில் எதிர் நாயகியாக நடித்த ‘அண்ணியார்’ காயத்ரி, கதாநாயகன் பிரகாஷால் கொல்லப்படுவது போன்ற காட்சிகள் படமாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த தொடர் இந்த வாரத்துடன் நிறைவு பெறும் என்கிறது சின்னத் திரை வட்டாரம்.

புதிய மெகா தொடரின் புரொமோ விடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ளது சேனல். சற்குணம் என்ற பெண் வேலை செய்யாமல் ஊர் சுற்றித் திரியும் ஊதாரிக் கணவருடன் வாழ்க்கைப் போராட்டம் நடத்துவதே இதன் மையக் கதையாம். இத்தொடரின் பெயர் ‘நாயகி’. வரும் திங்கள் முதல் நாள்தோறும் இரவு 8 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அம்பிகா மற்றும் சென்னை 600 028 நாயகி விஷயலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com