இந்தியன் 2 பட அறிவிப்பினை பலூனில் பறக்க விட்டார் இயக்குநர் ஷங்கர்

1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. நடிகர் கமல்ஹாசன்
இந்தியன் 2 பட அறிவிப்பினை பலூனில் பறக்க விட்டார் இயக்குநர் ஷங்கர்
Updated on
1 min read

1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் சுதந்திர போராட்ட வீரராகவும் லஞ்சம் வாங்கும் அரசுப் பணியாளராகவும் நடித்து அசத்தியிருந்தார். 

தற்போது ஷங்கர் 2.0 பட இறுதி கட்டப் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்து அவர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்க்கும் இப்படத்திற்கு கலை இயக்கம் டி.முத்துராஜ். இசை அனிருத்.

இப்படத்தின் வசனத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும். டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தை பற்றிய அறிவிப்பினை தைவானில் இருந்த ஷங்கர் குடியரசு தின வாழ்த்துக்களுடன் ஒரு டிவிட்டர் செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தைவானில் இந்தியன் இரண்டாம் பாகம் என்று அச்சிடப்பட்டிருந்தது. பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன இயக்குநர் ஷங்கரின் இந்த புதிய பலூன் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com