பிக் பாஸ் 2 பிரச்னையைச் சுமூகமாகத் தீர்த்த குஷ்பு!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) உறுப்பினர்கள் மிகக்குறைவாக வேலை பார்ப்பதால்...
பிக் பாஸ் 2 பிரச்னையைச் சுமூகமாகத் தீர்த்த குஷ்பு!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) உறுப்பினர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் வேலை பார்ப்பதால், பிக் பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று ஃபெப்சி அமைப்பு சில நாள்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தது.  

பிக் பாஸ் 2 படப்பிடிப்பில் பணிபுரியும் 75% ஊழியர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இது ஃபெப்சி அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. கடந்த வருடமும் இதேபோல சிக்கல் ஏற்பட்டபோது, கமலிடம் ஃபெப்சி அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி 50% பெப்சி ஊழியர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிந்தார்கள். ஆனால் அதே பிரச்னை இந்தமுறையும் தொடர்வதால் மீண்டும் போராட முடிவெடுத்துள்ளதாக ஃபெப்சி அமைப்பு கூறியது. இதனால் பிக் பாஸ் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்தச் சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக ஃபெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி கூறியுள்ளார். இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: சின்னத்திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் குஷ்பு அப்போது வெளிநாடு சென்றிருந்தார். திரும்பி வந்த பிறகு பிரச்னை குறித்து விவாதித்தார். இந்தப் பிரச்னையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். இப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எங்கள் தொழிலாளர்கள் எத்தனை பேர் கலந்துகொள்ளவேண்டும் என்பதில் ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கமல் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று ஃபெப்சி சார்பாக முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் கமலுடனான பேச்சுவார்த்தைக்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com