308 பெண்களை மயக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடைபிடித்த வழிமுறை இதுதான்!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் ராஜ்குமார் ஹிரானி இயக்கி வருகிறார்.
308 பெண்களை மயக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடைபிடித்த வழிமுறை இதுதான்!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் ராஜ்குமார் ஹிரானி இந்தி படமொன்றை இயக்கி வருகிறார். ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடிக்கிறார். சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா, தபு, விக்கி கோஷல், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சஞ்சய் தத்தின் தாய் நர்கீஸாக மணிஷா கொய்ராலா நடிக்கிறார்.  

இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில், சஞ்சய் தத் தன் வாழ்க்கையில் 308 பெண்களுடன் டேட்டிங் உறவில் இருந்துள்ளேன் என்று கூறுவார். இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கூறுகையில், 'சஞ்சய் டேட்டிங் செய்யும் பெண்ணை வழக்கமாக ஒரு கல்லறைக்கு அழைத்துச் செல்வார். என் அம்மாவை நீ சந்திக்க வேண்டும் என்றுதான் கல்லறைக்கு அழைத்து வந்தேன் என்பார். அவரது அம்மாவின் கல்லறை என்று கூறியதும் அந்தப் பெண்ணின் முகபாவங்களைக் கவனிப்பார். அந்தப் பெண்ணும் இளகி, சஞ்சியிடம் மனநெருக்கம் கொள்வார். ஆனால் உண்மையில் அந்தக் கல்லறை அவருடைய தாயுடையது இல்லை. பெண்களை தன்னை நேசிக்க வைக்க சஞ்சய் தத் செய்த தில்லு முல்லு வேலை அது’ என்று கூறினார். சஞ்சய் தத் நடிகைகள் மாதுரி தீட்சித், டினா முனிம், ரிச்சா ஷர்மா உள்ளிட்ட பலரைக் காதலித்தவர். போதை பழக்கம், மதுப் பழக்கம் என்று உளவியல் சிக்கலால் பாதிப்புக்குள்ளாகி மறுவாழ்வு மையத்துக்குச் சென்று சிகிச்சை பெற்றவர். தன் மனத்தில் உள்ளவற்றை ஒளிக்காமல் வெளிப்படையாகப் பேசும் தன்மையுடையவர்.

பேட்டியின் தொடர்ச்சியாக ராஜ்குமார் மேலும் கூறுகையில், 'சஞ்சய் தத்துக்கு கோபம் வந்து விட்டால் எந்த எல்லைக்கும் போவார். ஒரு தடவை அவருடைய பெண் தோழி சஞ்சய் தத்தை விட்டுப் பிரிந்துவிட்டார். தன்னுடைய நண்பரின் புதுக் காரை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மோதி இரண்டு கார்களையும் சேதப்படுத்தியுள்ளார். அவர் மோதி உடைத்த கார் தன் காதலியின் புதுக் காதலனின் கார் என்பது பின்னர் தான் சஞ்சய் தத்துக்குத் தெரிய வந்தது’ என்றார்.{pagination-pagination}

பாலிவுட் மட்டுமல்லாமல் திரை ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பயோபிக் சஞ்சு. ட்ரெய்லரில் அசத்தியிருக்கும் ரன்பீர் கபூர் படம் முழுக்க சஞ்சய் தத்தாகவே வாழ்ந்துள்ளார் என்று இருவரது ரசிகர்களும் வலைத்தளங்களில் புகழ்ந்து வருகிறார்கள். 

சஞ்சய் படம் ஜூன் 29 ந்தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com