தேசிய விருதுகளால் பெருமிதம்: இயக்குநர் செழியன், பாடகி ஷாஷா திரிபாதி பேட்டி

தேசிய விருதுகளால் பெருமிதம் அடைவதாக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற செழியன், சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்ற ஷாஷா திரிபாதி ஆகியோர் கூறினர்.
தேசிய விருதுகளால் பெருமிதம்: இயக்குநர் செழியன், பாடகி ஷாஷா திரிபாதி பேட்டி

தேசிய விருதுகளால் பெருமிதம் அடைவதாக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற செழியன், சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்ற ஷாஷா திரிபாதி ஆகியோர் கூறினர்.
65- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி, சிறந்த திரைப்படப் பின்னணி இசை, பாடல்கள் இசையமைப்புக்கான இரு விருதுகளுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய 'டு லெட்' படத்துக்கும், 'காற்று வெளியிடை...' படத்தில் 'வான் வருவான்' பாடலைப் பாடிய ஷாஷா திரிபாதிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதும் அறிவிக்கப்பட்டன. 
இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தில்லி வந்திருந்த 'டு லெட்' பட இயக்குநர் செழியன் 'தினமணி' நிருபருக்கு அவர் அளித்த பேட்டி: தமிழில் வெளியாகும் 'இன்டிபென்டன்ட் சினிமா'க்களில் சில மட்டுமே தேசிய அளவில் கவனம் பெறுகின்றன. அந்த வகையில் தேசிய விருது வென்ற 'டு-லெட்' திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையைப் படம் பிடித்தால் அதுவே மிகச் சிறந்த சினிமாவாக மாறும் என்பதற்கு இந்தப் படம் சான்றாகும். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் அவர். 
சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது பெற்ற ஷாஷா திரிபாதி கூறுகையில், ' மிக அரிதான விருதுகளில் ஒன்றாக மதிக்கப்படும் தேசிய விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானால்தான் இவ்விருது சாத்தியமானது. இந்த விருதை எனது பெற்றோர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இசையில் என்னை வளர்த்தெடுத்தவர்களுக்கும், விருது கமிட்டி உறுப்பினர்களுக்கும் நன்றி' என்றார் அவர். 

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com