கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்கும் கங்கனா ரனாவத், காலா நாயகி ஷூமா மற்றும் தனுஷ்! (படங்கள்)

கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்கும் கங்கனா ரனாவத், காலா நாயகி ஷூமா மற்றும் தனுஷ்! (படங்கள்)

71-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது
Published on

71-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத் மற்றும் காலா நாயகி ஹூமா குரேஷி இதில் ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

கேன்ஸ் சர்வதேச விழாவில் பங்கேற்க விமானத்தில் பறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலாவில் நடித்த ஹூமாவால் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

கங்கனா ரனாவத்தின் உடையை புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளரான சப்யாசாக்‌ஷி வடிவமைத்துள்ளார்.

ஹூமா குரேஷியின் உடையை வருண் பாஹ்ல் வடிவமைத்துள்ளார். இவர்கள் இருவரும் கேன்ஸ் விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இவர்களைத் தவிர கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருப்பவர்கள் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், தீபிகா படுகோன் ஆகியோர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir) திரைப்படம் கேன்ஸில் திரையிடப்படுகிறது. தனுஷ் முதல் முறையாக அவ்விழாவில் கலந்து கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com