தவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது: சரண்யா பொன்வண்ணன்

தன் வாழ்வில் இனியொரு படத்தின் படப்பிடிப்பு இத்தனை மோசமான விதத்தில் அமைந்து விடவே கூடாது என சரண்யா மனதுக்குள் வெறுக்கும் அளவுக்கு அப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் அமைந்தன. திரைப்படம் வெளிவந்து மாபெர
தவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது: சரண்யா பொன்வண்ணன்


தனது திரையுலக வாழ்வில் மிக மோசமாகத் தான் மனதளவில் பாதிக்கப்பட்ட காலகட்டம் என்றால் அது சேரனின் ‘தவமாய்த் தவமிருந்து’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட காலகட்டம் தான் என சமீபத்தில் இணைய ஊடகமொன்றுக்கு தான் அளித்த நேர்காணலொன்றில் சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் சேரனுக்கும், சரண்யாவுக்குமான அபிப்ராய பேதங்கள் அப்போதே ஊடகங்களில் கிசுகிசுக்களாக வெளிவந்திருந்தன. அத்திரைப்படத்தில் இயக்குனரும், நாயகனுமான சேரன், தனது தாயார் கதாபாத்திரத்தில் நடித்த சரண்யாவை படப்பிடிப்பு தளத்தில் நடத்திய விதம் குறித்து சரண்யாவுக்கு திருப்தியின்மை இருந்தது. அது மட்டுமல்ல காட்சிகளை விளக்கும் போதும், காட்சிகளுக்கு தயாராகும் போதும் மரியாதைக் குறைவாகத் தான் நடத்தப்பட்டதாக சரண்யா வருந்தினார் எனவும் அப்போதைய தகவல்கள் கூறுகின்றன.

தன் வாழ்வில் இனியொரு படத்தின் படப்பிடிப்பு இத்தனை மோசமான விதத்தில் அமைந்து விடவே கூடாது என சரண்யா மனதுக்குள் வெறுக்கும் அளவுக்கு அப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் அமைந்தன. திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் நாயகன் சேரனுக்குத் தந்தையாக நடித்த ராஜ்கிரணுக்கும் தாயாக நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கும் நல்ல பெயரையும் அதிகமான திரைப்பட வாய்ப்புகளையும் அப்படம் பெற்றுத்தந்தது.

படத்தின் வெளியீடு மற்றும் வெற்றிக்குப் பிறகு தற்போது சரண்யா மற்றும் சேரன் இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து இருவரும் நட்புடனே பழகி வருகின்றனர். ஆயினும் தன்னால் அத்திரைப்படத்தின் கசப்பான படப்பிடிப்பு நாட்களை இப்போதும் மறக்க முடியாது. அப்படியான நாட்கள் இனி தனது வாழ்நாளில் வரவே கூடாது என்பது தனது பிரார்த்தனைகளில் ஒன்று என நகைச்சுவையாகக் கூறி;

‘தவமாய் தவமிருந்து படத்தின் படப்பிடிப்பின் போது சேரனைக் கண்டாலே வெட்டிக் கொல்ல வேண்டும் போல் அத்தனை ஆத்திரம் வரும் எனக்கு, காரணம் எங்கள் இருவருக்குமிடையே அப்போது சரியான புரிதல் இல்லை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குப் புரியாது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவருக்குப் புரியாது’ இருவருமே ஒருவர் மீது ஒருவர் கோபத்துடனே அப்படத்தில் நடித்தோம்.’

- என்று அந்த மோசமான நாட்களை சரண்யா நினைவுகூர்ந்த விதம் அவரது உண்மையான கஷ்டத்தைப் புலப்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com