பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான கலாசால பாபு மரணம்!

மலையாளத் திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கலாசால பாபு. இவர் ஒரு நடிகரும் கூட. வில்லன் மற்றும் குணசித்திர
பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான கலாசால பாபு மரணம்!

மலையாளத் திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கலாசால பாபு. இவர் ஒரு நடிகரும் கூட. வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கலாசால பாபுவின் தந்தை கலா மண்டலம் கிருஷ்ணன் நாயர் பிரபல கதகளி கலைஞர் ஆவார். இவரது தாய் கல்யாணிக் குட்டி அம்மாவும் மோஹினி ஆட்டக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1977-ம் ஆண்டு வெளியான இணையே தேடி என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நாடகக் கலைஞர் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.  ரன் அவே, பாலேட்டன், கஸ்தூரி மான், துருக்கு குலான், லயன் ஆகியவை அவருக்கு  பெயர் வாங்கி தந்த படங்கள். கடைசியாக அவர் நடித்த படம் குயின்.

அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கலாசால பாபு. ஞாயிற்றுக் கிழமை (மே 13) இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட செரிபெரல் ஹெமரேஜ் (cerebral hemorrhage) ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு 68 வயது.

கலாசால பாபுவிற்கு மனைவி லலிதா, மகள் ஸ்ரீதேவி மற்றும் மகன் விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர். அவரது  பிரிவால் துயரத்திலிருக்கும் அவர் குடும்பத்திற்கு, திரையுலகை சார்ந்த அவரது நண்பர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு மலையாள திரையுலகினரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com