வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இந்த வாரம் வெளியாகும் ஐந்து தமிழ்ப் படங்கள்!

கடந்த ஒரு மாத காலமாக வெளியான படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த வாரம் ஐந்து தமிழ்ப்படங்கள்...

News image
Updated On :23 அக்டோபர் 2018, 5:51 am

கடந்த ஒரு மாத காலமாக வெளியான படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த வாரம் ஐந்து தமிழ்ப்படங்கள் வெளிவரவுள்ளன.

ஜீனியஸ், ஜருகண்டி, எடக்கு, கரிமுகன், திருப்பதி சாமி குடும்பம் என ஐந்துப் படங்கள் அக்டோபர் 26 அன்று வெளிவரவுள்ளன. 

ரோஷன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் - ஜீனியஸ். யுவன் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்துப் படங்களில் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. 

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி எழுதி இயக்கியுள்ள படம் - ஜருகண்டி. ஜெய், ரெபா மோனிகா, ரோபோ சங்கர், டேனியல், அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

எடக்கு என்கிற படம் விஜய் சேதுபதி அவருடைய திரையுலக ஆரம்பக் காலக்கட்டத்தில் நடித்த கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக். இதில் அவர் வில்லனாக நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் - கரிமுகன். அடுத்த இரு வாரங்களுக்குள் தீபாவளிப் படங்கள் வெளிவருகிற நிலையில் இந்த ஐந்துப் படங்களும் எந்தளவுக்கு வரவேற்பைப் பெறும் என வரும் நாள்களில் தெரியவரும். 

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.